The content of this site are my own personal opinions and do not represent my employer's view in anyway. In addition, my thoughts and opinions often change, and as a weblog is intended to provide a semi-permanent point in time snapshot you should not consider out of date posts to reflect my current thoughts and opinions.
தமிழில் வெளிவந்த நகைச்சுவை நாடங்களில் மிகவும் பிரபலமாக கருதப்படுவது அய்யா... அம்மா... அம்மம்மா...
என் சிறு வயதில் சென்னை தொலைக்காட்சியில் முதல் தடவையாக பார்த்ததில் இருந்து என்னை மிகவும் கவார்ந்த மற்றும் ஒலிநாடாவில் (Audio Cassette) பலப்பல முறை நான் கேட்ட நாடங்கமும் இது தான். ‘கிரேசி’ மோகன் எழுதி காத்தாடி ராமமூர்த்தி நடித்த இந்த நாடங்கம், இதற்குப்பின் தமிழில் வெளிவந்த அனைத்து நகைச்சுவைப் படைப்புகளிலும் (சினிமா, நாடகம், கதை) தனது தாக்கத்தை பதித்துள்ளது. பிற்காலத்தில் ‘கிரேசி’ மோகன் எழுதிய பல பிரபலமாக நாடங்களில் அவரையும் அறியாமல் சிலயிடங்களில் இதன் துனுக்குகளை நாம் கேட்கலாம்.
ஒலிநாடாவில் மட்டுமே வெளிவந்த இந்த படைப்பு இப்பொழுது ஓளிதட்டு (VCD) வடிவில் வந்துள்ளது. போன வாரம் Landmark கடையில் பார்த்தவுடன் இதை வாங்கியதில் (ரூ 199) எனக்கு மகிழ்ச்சி. ஒரு சிறு ஏமாற்றம் இது சென்னை தொலைக்காட்சியில் வெளிவந்த காத்தாடி ராமமூர்த்தியுடன் டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்த மூலப்பிரதி அல்ல சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது,
இருந்தாலும் இந்த நாடங்கத்தை இதுவரைப் பார்க்காதவார்கள் உடனே இந்த ஓளிதட்டை வாங்கிப் பார்க்கலாம்.
Remember Me